முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோழை என்பதா? - அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

 
sekarbabu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோழை என விமர்சித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோழை என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோழை என விமர்சித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். 
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், வழக்கிற்கு பயந்து, மத்திய அரசுக்கு மண்டியிடுவது கோழையா? மாநில உரிமைக்காக சவால் விடுவது கோழையா? மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசிற்கு சவால் விடும் முதலமைச்சரை கோழை என்பதா?முதல்வரை கோழை என்பவர்கள், கோழை என்பதற்கு அர்த்தம் தெரியாத நபர்களாக தான் இருக்க முடியும். மாநில உரிமைக்கு குரல் கொடுக்கும் இரும்பு மனிதர் முதல்வர் ஸ்டாலின் என கூறினார்.