விஜய்யின் பரந்தூர் பயணம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது- சேகர்பாபு கிண்டல்

சென்னை ஓட்டேரியிலுள்ள திரு.வி.க. நகர் வடக்கு பகுதி, 74-வது வார்டு, பாஷ்யம் தெருவில் இருந்து 12 வது நாள் மக்களைத் தேடி பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீதி விதியாக நடந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிரிசில்நகர் பூங்கா, திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா ராஜன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி. மண்டலக்குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விஜய் நேற்று பரந்தூர் சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அன்னா ஹசாரே ஒராண்டு காலம் உண்ணாவிரதம் இருந்தார். அந்த போராட்டமே கடந்து சென்று விட்டது. அதே போல் நேற்று நடந்தது நேற்றுடன் முடிவடைந்து விட்டது என பதிலளித்தார்.
நாங்கள் சூரியன் உதிக்கும் முன் மக்கள் பணிக்கு வந்துள்ளோம், இரவு வரை இதனை மேற்கொள்கிறோம். வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்க்கொண்டு அந்த ஆய்வின் படி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாரிமுனை பேருந்து நிலையம் 800கோடி செலவில் கட்டப்படவுள்ளது, மாநகராட்சி 160 கோடி ஒதுக்குகிறது . டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்காலிகமாக இராயபுரம் பாலத்தின் கீழ் ரூ.7 கோடியில் பாரிமுனை பேருந்து நிலையம் மாற்றப்படுகிறது. வடசென்னையின் மறுமலர்ச்சி காலம் திராவிடமாடல் ஆட்சி காலம் தான் என்றார்.
மேயர் பிரியா பேசுகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் வார்டு வாரியாக ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது 12வது நாளாக ஒட்டேரி பாஷ்யம் தெருவில் அமைச்சர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டோம் ஆய்வின் போது இந்துசயம அறநிலையத்துறை இடத்தில் வாடகை செலுத்தி குடியிருக்கிறார்கள் அங்குள்ள 5 குடும்பத்தாருக்கு குடிசைமாற்றுவாரியத்தில் மாற்று இடம் கொடுத்து அவ்விடத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளார்கள். குப்பை கொட்டுபவர்களை சி.சி.டி.வி பொறுத்தப்பட்டு குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. நாய்களை பிடித்து கருத்தடை செய்து அதே இடத்தில் விடக்கூடிய வகையில் தான் ஒன்றிய அரசு விதிகள் உள்ளது என பேசினார்.