விரைவில் கோவில்களில் மின்னணு கருத்து பெட்டி- அமைச்சர் சேகர்பாபு
கார்த்திகை தீபத்தை ஒட்டி கார்த்திகை பௌர்ணமி தினத்தில் சென்னை திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆதிபுரீஸ்வரருக்கு புற்று கவசம் நீக்கி சுயம்பு புற்றாக பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
அங்கு சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளார்களிடம் பேசிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, “திருவண்ணாமலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் இயற்கையும், இறைவனும் இந்த ஆட்சியின் மீது வைத்திருக்கின்ற அசைக்க முடியாத நல்லாட்சி என்பதை தெரியப்படுத்தும் முறையில் இயற்கை இறைவன் அருள் வரத்தோடு முதலமைச்சருடைய நல்லாசியோடு நேற்று தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அந்த வகையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவொற்றியூரில் கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு மூன்று நாட்கள் இந்த கவசம் திறக்கின்ற நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வுக்கு லட்சக்கணக்கான மக்கள் தரிசனத்திற்கு வருவார்கள். இந்த சிறப்பென்றால் மூன்று நாட்கள் தான் இறைவனை முழுமையாக தரிசிக்க முடியும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு அதில் புனகு சாம்பிராணி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அடங்கிய கவசத்தில் வைக்க முடியும். அதை மையாகத்தான் பக்தர்களுக்கு வழங்கப்படும், இதில் லட்சக்கண பக்தர்கள் பங்கேற்பார்கள். அதனால் காவல்துறையும் இந்து சமய அறநிலை துறையினரும் இணைந்து வருகின்ற பக்தர்களுக்கு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று இரவு வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு இரவு 11 மணியை கடந்தாலும் தரிசனம் தொடரும். மூன்று நாட்களும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படையில பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பக்தர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மின்னணு கருத்து பெட்டியை பக்தர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். மின்னணு கருத்து பெட்டி என்பது முதற்கட்டமாக ஏழு திருக்கோவிலில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. வடபழனியில் துறையின் அமைச்சர் என்பதன் முறையில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 463 பிரிவின்படி அதிக பக்தர்கள் வரக்கூடிய திருக்கோவில்களில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களிலும் மின்னணு கருத்து பெட்டி ஏற்படுவதற்கான முறை நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்