ஆகஸ்ட் 24,25ல் அனைத்துலக முருகன் மாநாடு- சேகர்பாபு

 
அமைச்சர் சேகர்பாபு

ஆகஸ்ட் மாதம் 24,25ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Image


பழனியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “முத்தமிழ் முருகன் மாநாட்டில் 2000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாள் முழுவதும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பக்தர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முருகன் மாநாட்டில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலர் குழு, விருது வழங்க போன்ற பல்வேறு பணிகளுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆம் தேதி இந்த முருகன் மாநாடு நடைபெற உள்ளது. எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் மாநாட்டை பார்வையிடலாம், அனைவருக்கும் உணவு வழங்கப்படும். திமுக ஆட்சி உண்மையான ஆன்மீகவாதிகளுக்கு நடைபெறுகிற ஆட்சி. குறை இருந்தால் சொல்லுங்கள் குற்றம் சொல்ல வேண்டாம்” எனக் கூறினார்.