திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வில்லை- அமைச்சர் சேகர்பாபு

 
அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிதாக எந்த விதமான கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சேகர்பாபு: அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர்; அறநிலையத்துறை அமைச்சர்!-துறை  ஒதுக்கப்பட்டதன் பின்னணி! Political Journey of Minister P.K.Sekarbabu. -  Vikatan

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், 'கந்த சஷ்டி விழா' புகழ் பெற்றது. உலகெங்கும் இருந்து பல லட்சக்கணக்கான முருகப் பக்தர்கள் இதற்காக திருச்செந்தூர் வருவார்கள். கந்த சஷ்டியின் 6 நாட்களும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இக்கோயிலில் தங்குவார்கள். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான 'சூரசம்ஹாரம்' வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை, இந்து சமய அறநிலையத்துறை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ரூ. 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2,000 ஆகவும், ரூ. 100 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 1,000 ஆகவும், ரூ. 500 ஆக இருந்த அபிஷேக கட்டணம் ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. 

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிதாக எந்த விதமான கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை. சிறப்பு கட்டணம் குறித்து வீடியோ வெளியிட்டவர் மீது திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆதிமுக ஆட்சியில் தான் கட்டணம் உயர்வு கொண்டுவரப்பட்டது. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்ற மனப்பால் குடித்துக் கொண்டு, பகல் கனவை கண்டு கொண்டிருப்பவர்கள்தான் இந்த விஷம பிரச்சாரத்துக்கு பின்னணியில் இருப்பவர்கள்” என்றார்.