எங்கு பார்த்தாலும் தெய்வ கோஷம்தான்.. இது ஒரு ஆன்மிக ஆட்சி - சேகர் பாபு பேச்சு

அரோகரா.. நமோ நாராயணா.. சிவ சிவ" என தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தெய்வ கோஷம்தான் கேட்குது என அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான மானிய கோரிக்கை நடைபெற்ற நிலையில், உறுப்பினர்கள் கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், இன்று மட்டும் தமிழகத்தில் 22 கோயில்களில் குடமுழுக்கு நடந்துகொண்டிருக்கிறது. மருதமலை முருகன் கோவில் உள்ளிட்ட 22 கோயில்களில் இன்று குடமுழுக்கு நடந்து வருகிறது. 350க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் இன்று கோயில்களில் தமிழ் திருமறை பாடி குடமுழுக்கை நடத்தி வருகின்றனர். அரோகரா.. நமோ நாராயணா.. சிவ சிவ" என தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தெய்வ கோஷம்தான்.. இது ஒரு ஆன்மிக ஆட்சி என கூறினார்.