“திராவிட ஆட்சியில் அடிபணிவது என்பது கிடையாது” - அமைச்சர் சேகர் பாபு

 
sekar babu

திராவிட ஆட்சியில் அடிபணிவது என்பது கிடையாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள இரவீஸ்வரர்  கோவிலில் உள்ள தெப்பக்குளத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , சட்டமன்ற கூட்டத்தொடரில் வியாசர்பாடியில் உள்ள இரவீஸ்வரர்  கோவிலின் தெப்பக் குளத்தில் மதில் சுவர் எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோவிலை ஆய்வு செய்துள்ளோம். விரைவில் மதில் சுவர் எழுப்பப்படும் என்றார்.

sekar babu

தொடர்ந்து பேசிய அவர், " தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்து கொள்ளலாம் என இந்து அறநிலை துறை சார்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  விருப்பம் உள்ள திருக்கோவில்களில் தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது . சட்டப்பேரவையில் தமிழில் அர்ச்சனை செய்தால் இதற்கு முன்னதாக இருந்த பங்கு தொகையை விட 60 % உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து பெரும்பான்மையான கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sekar babu

அடி பணிவது என்பது தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது. அனைத்து மதத்திற்கும் சமமான ஆட்சி தான் நமது முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி.  தருமபுர ஆதினம் பட்டின பிரவேசம் விஷயத்தில் வேண்டுகோளை ஏற்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. கருத்து சுதந்திரம் என்பது முக்கியமானது. தமிழக முதலமைச்சர் வரவேற்கிறார் .மகளிருக்கான உரிமைதொகை கூடிய விரைவில் வழங்கப்படும் .அதற்கான கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது .சொல்வதை செய்தும் , சொல்லாததை செய்வதும் தான் தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிக்கையில் புரிந்த அனைத்து அறிவிப்புகளும் செயல்படுத்தப்படும்" என்றார்.