பவுடர் பஞ்சாயித்தே முடியல அதுக்குள்ள அடுத்து... அமைச்சர் சரத்குமாரின் அடுத்த வீடியோ
மனிதவளத்துறை அமைச்சர் கில்லி சரத்குமார் கடற்கரையில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
Beer can னுடன் அம்சமாக ரீல்ஸ் போட்டு வீடியோ வெளியிட்ட போதை பைவுடர் புகழ் ப்ளாக் டிக்கெட் சரத்குமார்…
— தஞ்சாவூரான் 🪼 (@Raja180614s) June 29, 2026
pic.twitter.com/F6koP2Ms2l
தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் சரத் குமார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள அமைச்சர் சரத்குமார், அது போதைப்பொருள் அல்ல, குழந்தையின் மாத்திரை என்றார். ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியான திமுக, போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவித்தாகக் கூறி, அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்த விவகாரமே இன்னும் அடங்காத நிலையில், மனிதவளத்துறை அமைச்சர் கில்லி சரத்குமார் கடற்கரையில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

