இந்திய கடனை அடைக்க அமைச்சரின் அடடே ஐடியா
Aug 18, 2026, 20:06 IST1787063783836
முதலமைச்சர் விஜயின் சேவையை பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால் இந்தியாவின் கடனை இன்றே அடைக்கலாம் என அமைச்சர் சரத்குமார் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் சரத்குமார், “முதல்வர் விஜயின் சேவையை பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால் இந்தியாவின் கடனை இன்றே அடைக்கலாம். AM - PM பார்க்காமல் உழைக்கும் எங்கள் CM தான் நாளைய PM. எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், கோட்டையிலும் CM ஆக இருக்கும் எங்கள் தலைவர். எல்லா புகழும் தளபதிக்கே.. எங்கும் வெற்றி.. எதிலும் வெற்றி.. கிருஷ்ணன் பிறந்ததை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இயேசு பிறந்ததை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். நபிகள் பிறந்ததை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். நாடே கொண்டாடும் பிறந்ததினம் எது தெரியுமா? தமிழகத்தின் எழுச்சி பெறுநாள் ஜூன் 22” என முதல்வர் விஜய்க்கு புகழாரம் சூட்டினார்.

