பல்லடம் கொலை சம்பவம் தொடர்பாக அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு

 
tn

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிலத்தில் அமர்ந்த மது அருந்தியதற்காக தட்டி கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை போதை கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செந்தில்குமார் என்பவர் அரிசி கடை வைத்து நடத்தி வந்த நிலையில் அவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் மது அருந்துள்ளனர்.

Death

இதை அவர் தட்டி கேட்டுள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த மோகன்ராஜ்,  ரத்தினம்பாள் , புஷ்பவதி ஆகியோரை அரிவாளால் வெட்டி தப்பி சென்றுள்ளனர். 

death

இந்நிலையில் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4  பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில்  கொலை நடந்த இடத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார் . அத்துடன் இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

tn

பல்லடத்தில் மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர், ஈரோடு, நாமக்கல் எஸ்.பி.க்கள் முகாமிட்டுள்ளனர். அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அலுவலகத்தில் இருந்து, பல்லடத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.