வெளி முகமை மூலம் காலி மது பாட்டில்கள் வாங்க திட்டம்! டாஸ்மாக்கை திறக்க அமைச்சர் வேண்டுகோள்

 
ட்

டாஸ்மாக் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளர்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்தது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் பணம் வாங்குபவர்களின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளில் விற்பனையாகும் மது பாட்டில்களை மது பிரியர்களிடமிருந்து மீண்டும் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தால் கூடுதல் பணிசுமை இருப்பதாக கூறி, காலி மதுப்பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை கைவிடக் கோரி,  2 வது நாளாக டாஸ்மாக்கை திறக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் கடையை அடைத்து போராடும் நிலையில் பேட்டியளித்த அமைச்சர் விக்னேஷ், “டாஸ்மாக் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஊழியர்கள் பக்கமே அரசு நிற்கும். ஒரு மாதத்திற்குள் பிரச்சினை தீர்க்கப்படும். இதுவரை 462 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. வெளி முகமை மூலம் காலி மது பாட்டில்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் இறுதிக்குள் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும். காலி மதுபாட்டில்களை கையாளும் தற்போதைய நடைமுறைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.