தமிழ்நாடு அரசு போராடி விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்று தரும்- அமைச்சர் ரகுபதி

 
Minister regupathy

தமிழ்நாடு அரசு போராடி காவிரி நீரை விவசாயிகளுக்கு பெற்று தரும், யார் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு  எதிரான மனநிலையை தான் அங்கு முடிவு எடுப்பார்கள் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலை.. ஜனாதிபதியை கட்டாயப்படுத்த முடியாது – அமைச்சர் ரகுபதி பேட்டி!

புதுக்கோட்டை அடுத்த சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “சிறைச்சாலைகள் ஒருவரை திருந்தி வாழச் செய்யும் ஒரு இடமாக மாற்றும் பணி முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது. சிறை வளாகங்களில் திருக்குறள் உள்ளிட்ட நல்வழிப்படுத்தும் போதனைகள் கூறப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் உள்ளிட்டவர்கள் வெளியே வருவது எங்கள் கையில் ஏதுமில்லை. தமிழ்நாடு அரசு போராடி காவிரி நீரை விவசாயிகளுக்கு பெற்று தரும், யார் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு  எதிதிரான மனநிலையை தான் அங்கு முடிவு எடுப்பார்கள். தமிழ்நாடு அரசை பொறுத்த வரை விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த பயிரை கருகவிடாமல் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, கண்டிப்பாக நாங்கள் அதை எடுத்து நீரை பெற்றுத் தருவோம்.

பயிர் காப்பீடு அனைத்து பயிர்களுக்கும் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் அரசு நடவடிக்கை எடுக்கும்.  கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் விசாரணை செய்யாமல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் திமுக ஆட்சியில் வழக்கு விசாரணை நடைபெற்று சாட்சியங்கள் இல்லாததால் வழக்குகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது” என்றார்.