ஓபிஎஸ் அதிமுகவில் இணைவதற்கான கதவு மூடப்பட்டுள்ளது- ஆர்.பி.உதயகுமார்

 
udhayakumar

ஓபிஎஸ் அதிமுகவில் இணைவதற்கான கதவு மூடப்பட்டுள்ளது என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மதுரையில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்காக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போர்வை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், ”ஒரு நாள் மழைக்கே தமிழகம் தத்தளித்து வருகிறது, சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு கிடைத்த கொடை, மழைக்கான நிவாரண முகாம்கள் அமைக்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்க்கொள்ளவில்லை.

அதிமுக பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்கள் கொடி, கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது, நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பதை போல ஒ.பி.எஸ் செயல்பட்டார். உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவை தெளிவான பாதையில் பயணம் செய்ய வைக்கும். அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய அதிமுக கதவு திறந்து இருக்கும், எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுக இணைவதற்கான கதவு மூடப்பட்டுள்ளது” என கூறினார்