“அந்த சின்ன பையன் தான் வேலேந்தி ஆட்சிக்கு முடிவுரை கொண்டு வந்தாராம், 2026 தேர்தலே ஒரு சூரசம்ஹாரம் தான்”- அமைச்சர் ரமேஷ்

 
அச்

இந்த சின்ன பையனா என்னை வீழ்த்தி விட போகிறான்? அந்த சின்ன பையன் தான் வேலேந்தி ஆட்சிக்கு முடிவுரை கொண்டு வந்தாராம், 2026 தேர்தலே ஒரு சூரசம்ஹாரம் தான்  என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ரமேஷ், “தான் தான் என்றிருந்த சூரனை ஒரு பாலகன் வென்றான். 2026 சட்டப்பேரவை தேர்தல் சூரசம்ஹாரம் போன்றது; முதலமைச்சர் விஜய் வேலேந்தி, சூரனை வீழ்த்தியிருக்கிறார் பெரியாரின் பேரனாக முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்தி வருகிறார். 1962ஆம் ஆண்டில் அண்ணாவின் தம்பிகள் எப்படி செயல்பட்டார்களோ... இன்று அண்ணனின் தம்பிகளாக தவெக எம்.எல்.ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர். திருக்கோயில்களுக்கு சொந்தமான 40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் தனி நபர் பெயரில் பட்டாவாக மாறி இருக்கிறது. கணினி சிட்டா பதிவின்போது 33,943 பட்டாகள் தனிநபர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை த.வெ.க அரசு மீட்கும். 

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படும். திருச்செந்தூர் முருகன் கோவில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கட்டணமில்லாமல் வந்து செல்ல தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய சிற்றுந்துகள் மற்றும் பேருந்துகள் வாங்கப்படும். ஆழ்வார்கள், சித்தர்கள் பெயரில் விழாக்கள் நடத்தப்படும். திருக்கோயில்களிலேயே பிரசாதம் தயாரிக்கும் திட்டம் விரிவாக்கப்படும். திருக்கோயில் பணியிடங்களுக்குதேர்வு வாரியம் அமைக்கப்படும். பழைய கோயில்களில் ரூ.125 கோடியுல் திருப்பணிகள் நடத்தப்படும்” என்றார்.