பேரவையில் தேவையின்றி பிரச்சனை செய்யும் தி.மு.க.வினர் - ரமேஷ்

 
பேரவையில் தேவையின்றி பிரச்சனை செய்யும் தி.மு.க.வினர் - ரமேஷ் 

சட்டப்பேரவையில் தி.மு.க.வினர் தேவையின்றி பிரச்சனை செய்வதாக அமைச்சர் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “சட்டமன்றத்தில் சண்டை நிகழ வேண்டும் என திமுகவினர் தேவையின்றி பிரச்சனையில் ஈடுபடுகின்றனர். அமைச்சர்கள் பேசும்போது வரிக்கு வரி கூச்சலிடுவதுடன், சில முன்னாள் அமைச்சர்கள் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர்.  எதிர்க்கட்சி கேள்விக்கு அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு உள்ளது? எதிர்க்கட்சியினருக்கு மாண்பு இருக்கிறதா? எப்படி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிக்கு தெரியவில்லை;. சட்டப்பேரவையில் சண்டை நிகழ வேண்டும் என திமுகவினர் கூச்சலிடுகின்றனர். வரிக்கு வரிக்கு கூச்சலிட்டு, தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர்.

ரேஷன் அரிசியை மக்கள் பயன்படுத்துவதில்லை. தரமாக கொடுக்க வேண்டும் என்பது முதல்வரின் நோக்கமாக உள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் சட்டசபையில் ஜனநாயகம் இல்லை. தற்போது தவெக ஆட்சியில்தான் உள்ளது” என்றார்.