"கோவில் நிலங்களை ஒரு இஞ்ச் கூட யாருக்கும் தர மாட்டோம்"- அமைச்சர் ரமேஷ்
இனாம் நிலத்திற்கும் கோவில் நிலத்திற்கும் வித்தியாசம் தெரியாதா? கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “கோயில் மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக வெளியான விவகாரத்தில் பொய்யும், புரட்டும் பரப்பப்பட்டு வருகிறது, தவெக அரசு மீது ஊழல் கறை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது. கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொடுத்துட்டாங்க என்று Propaganda பண்றாங்க.. இனாம் நிலத்திற்கும் கோவில் நிலத்திற்கும் வித்தியாசம் தெரியாதா? கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள். புதிதாக வந்த பதிவாளர் ஏற்கனவே உள்ள சிக்கல் தெரியாமல் அதனை பதிவு செய்துள்ளார். உடனடியாக அந்த பத்திரப் பதிவு நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழனி கோயில் விவகாரத்தில் விசாரணை உரிய நடத்தப்படும். பழனி கோயில் நிலத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பழனி கோயில் நிலத்தை அரசு மீண்டும் கைப்பற்றும். நிலத்தை யாருக்கும் பதிவு செய்யக் கூடாது என கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பழனி கோயில் நிலம் குறித்து தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை பாயும்
கரூர் கோயில் நில விவகாரத்தில் புதிய ஆட்சி அமைத்த பிறகு பட்டா போட்டு தரவில்லை. இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலம் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. கரூரில் 3,071 நிலங்கள் பத்திரப்பதிவுக்கு தடை உள்ளது. 2024 கோயில் நிலங்கள் பிளாக்கில் உள்ளன. ஒருபோதும் கோவில் நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். கோவில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு எந்த சமரசமும் செய்யாது. கோயில் மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் எனது உறவினர் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதை நிரூபிக்க முடியுமா?” என சவால் விடுத்தார்.

