எதிர்க்கட்சி இல்லாத சட்டசபையை அமைப்போம் - அமைச்சர் ரமேஷ்
Jun 1, 2026, 16:36 IST1780311974895
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ், “திருச்சி எங்களின் கோட்டை என்று கூறியவர்களின் மனக்கோட்டையைத் தகர்த்து, மலைக்கோட்டையை தளபதியின் கோட்டையாக மாற்றியவர் முதல்வர் விஜய். பல்லாண்டு தவம் இன்று நனவாகி உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினரே இல்லாத சட்டசபையில் தமிழ்நாடு முதல் அமைச்சராக எங்கள் தலைவரை அமர வைப்போம்” என்றார்.

