மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் VIP சலுகை இல்லை, அதிகார தோரணை இல்லை- கவனம் ஈர்க்கும் அமைச்சர் ரமேஷ்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் VIP சலுகை இல்லாமல், அதிகார தோரணை இல்லாமல் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று, தனது காலணியையும் கைபேசியையும் ஒப்படைத்து விட்டு சாதாரணமாக வரிசையில் நின்றபடி, கோவிலுக்குள் சென்றார் அமைச்சர் ரமேஷ். கோயிலின் நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோவில்களின் நிர்வாகம், வருவாய், சொத்துகள், பக்தர்களுக்கான வசதிகள் என அனைத்தும் இனி கண்காணிப்பில் இருக்கும் என்றும், முறைகேடுகள் மீது சமரசம் இல்லை. ஆய்வுகள் தொடரும். நடவடிக்கைகள் தொடரும் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 2 அல்லது 3 மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கட்டுமான பணிகளில் 90% முடிந்துவிட்டது. அது முடிந்தவுடன் திட்டமிட்ட தேதியில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

