அமைச்சர் ராஜ்மோகன் பேச்சால் லயோலா மணியின் பதவிக்கு ஆபத்து..!

 
1

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக, தனக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் பாடநூல் கழக தலைவர் லயோலா மணி மூலம் முன்வந்ததாக  அமைச்சர் ராஜ்மோகன் இன்று பேசியிருந்தார். அமைச்சரின் இந்தத் தகவல் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் கொடுக்க முன்வந்தவர் யார், லயோலா மணிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த குரல்கள் எழுந்துள்ளதால் லயோலா மணியின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

.தமிழக அரசின் சார்பில், 'தமிழ்நாடு நாள் விழா' நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், ''தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு, 5 கோடி ரூபாய் தருவதாக ஒருவர் என்னிடம் பேரம் பேசினார். 500 கோடி ரூபாய் கொடுத்தாலும், கொடுக்க முடியாது என்று தெரிவித்தேன்,'' என்றார்.

அமைச்சர்களின் பேச்சுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: தமிழ்நாடு கொடி தொடர்பாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது தேவையில்லாத ஒன்று. தேசியக் கொடி யே இந்திய ஒருமைப்பாட்டின் சின்னம். மாநிலங்களால் உருவாக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், மாநிலங்களுக்கென கொடி உண்டு. ஆனால், இந்தியா தனது நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கியது என்பதை, ஆதவ் அர்ஜுனா தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல, இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு, ஒருவர் லஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதை அமைச்சர் கூறுகிறார். ஒரு பொறுப்புள்ள அமைச்சர் செய்யும் காரியமா இது. ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் வழங்க முயற்சித்த நபர் மீதும், இடைத்தரகராக செயல்பட்ட லயோலா மணி மீதும், வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டாமா. லஞ்சம் வாங்குவதும் குற்றம், வழங்குவதும் குற்றம் என, அமைச்சருக்கு தெ ரியுமா, தெரியாதா?*

தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி: அமைச்சர் ராஜ்மோகனுக்கு, யாரோ ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதால், அதை அமைச்சரிடம் கொண்டு சென்ற லயோலா மணி கூட்டு சதிகாரர் ஆகிறார். ஊழல் தடுப்பு சட்டத்தின்படி, லஞ்சம் கொடுப்பதும், கொடுக்க முயல்வதும், கிரிமினல் குற்றம் தானே.அரசு பொறுப்பில் உள்ள லயோலா மணியோ, அமைச்சர் ராஜ்மோகனோ, இது குறித்து ஏன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையிடம், எந்தப் புகாரும் அளிக்கவில்லை. லஞ்சம் கொடுக்க வந்த அந்த உண்மையான குற்றவாளியை, அமைச்சரும், லயோலா மணியும், இன்னமும் பாதுகாத்து பதுக்குவது ஏன்?*

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; லஞ்சம் வாங்குவதும் குற்றம். பதவிக்காக ஒருவர் 5 கோடி ரூபாய், லயோலா மணி வழியே பேரம் பேசியதாக, அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். பதவிக்காக 5 கோடி ரூபாய் வழங்க முன்வந்தது யார். அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அந்த நபர் யார் என்பதை முதல்வர் விஜய், நாட்டு மக்களிடம் அடையாளம் காண்பித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.