என் கை கடிகாரத்தின் விலை ரூ.50 லட்சமா? - ஷாக்கான அமைச்சர் ராஜ்மோகன்

 
s

எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். 

Image

அண்மையில் அமைச்சர் ராஜ்மோகன் டெல்லி சென்று இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த கைக்கடிக்காரத்தின் விலை 50, 500 டாலர் என சமூக வலைதளங்களில் தகவல் கசிந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், "எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே, கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல.  உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் fake news factories கூட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.