என் உடலோடு திருக்குறள் புத்தகத்தை வைத்து நல்லடக்கம் செய்யுங்கள் - அமைச்சர் ராஜ்மோகன்
கடைசி ரத்தம் சுண்டி, மூச்சு நின்னு போய், நிரந்தர ஓய்வுக்கு போகும்போது, என் உடலோடு திருக்குறள் புத்தகத்தை வைத்து நல்லடக்கம் செய்யுங்கள் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், "தலைமைச் செயலகத்தில் தமிழ் சங்கம் உருவாக்கப்படும். தமிழ் சங்க தலைவராக CM விஜய் பங்காற்றுவார். உலகமெங்கும் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படும். அரசு அலுவலகங்களில் விரைவில் மரபு ஆடை தினம் அமல்படுத்தப்படும். இனி வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடையில் வர வேண்டும்.. முதலமைச்சரை தலைவராக கொண்டு தலைமை செயலகத்தில் தமிழ் சங்கம் உருவாக்கப்படும். மீண்டும் உலக தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் தொடங்கி உலகம் முழுவதும் நடைபெறும். தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு என்ற பெயரில் தமிழ் துறை சார்ந்த போட்டிகள் பள்ளிகளில் நடத்தப்படும். எல்லை போர் வீரர்களுக்கும் தமிழ் சேவை செய்தவர்களுக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
சத்தம் போட்டுப் பேசிய என்னை, 'தம்பி வா, சட்டமன்றத்தில் பேசலாம்' என எனக்கு வாய்ப்பளித்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். நவம்பர் 1 தமிழ்நாடு தினமாக வேண்டும் என்று சொன்னபோது, எந்தத் தயக்கமும் இன்றி, தமிழ்நாடு தினம் என்ற நீண்ட நாள் கனவைக் கருவாக்கி உருவாக்கிய முதல்வர் விஜய்க்கு நன்றி. கடைசி ரத்தம் சுண்டி, மூச்சு நின்னு போய், நிரந்தர ஓய்வுக்கு போகும்போது, என் உடலோடு திருக்குறள் புத்தகத்தை வைத்து நல்லடக்கம் செய்யுங்கள். இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க வந்தனர்" என்றார்.

