"ஆளுநரை Who are you-னு கேட்டவரு இன்று லோக்பவனை சுற்றி சுற்றி வருகிறார்"- உதயநிதியை கலாய்த்த ராஜ்மோகன்

 
w

எல்லா புள்ளிகளையும் Connect பண்ணி போனா கண்டிப்பா அது ஒரு கரை வேட்டி கிட்டதான் போய் நிற்கும்.. Worlds First AI ஊழலுக்கு திமுக பதில் சொல்லும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். 

சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "கடந்த கால ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது. அதற்கு ஒரே சாட்சி பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற ஊழல்கள் பெரியார் அறிவுலகம், பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கான அனுமதி என பல்வேறு ஊழல் அரங்கேறியுள்ளது. உலகத்தில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு ஊழல்கள் தமிழகத்தில் தான் நடைபெற்றுள்ளது. எல்லா புள்ளிகளையும் Connect பண்ணி போனா கண்டிப்பா அது ஒரு கரை வேட்டி கிட்டதான் போய் நிற்கும்.. Worlds First AI ஊழலுக்கு திமுக பதில் சொல்லும். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார். வசந்தம் கார்த்திகேயன் மீதான புகார் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. வசந்தம் கார்த்திகேயன் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?

எங்கு பார்த்தாலும் ஊழல் தான்..பள்ளிக் கல்வித்துறையில் பல கோடி ஊழல் செய்த திமுக,  பள்ளிக் குழந்தைகளை அடகு வைத்து விட்டார்கள்..யாரும் இனிமேல் தப்பிக்கவே முடியாது. தனியார் பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்க 3 ஆண்டுக்கு ஒரு முறை 40 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு, அதற்கென தனியே அலுவலகம் அமைத்து செயல்பட்டது குறித்து, பாதிக்கப்பட்ட 177 பள்ளிகள் புகார் கொடுத்ததன் பேரில் முன்னாள் அமைச்சர் வெளியே வர முடியாமல் விசாரணை நடைபெறுகிறது.  AI புத்தக ஊழலில் நிச்சயம் பல முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி பேசிய வீடியோவை பார்த்தேன்..அன்று ஆளுநரை  Who are you-னு கேட்டாரு..ஆனால் இன்று லோக்பவனை சுற்றி சுற்றி வருகிறார்" என்றார்.