“நீட்டை வைத்து வெற்று அரசியல் செய்யாதீங்க... அவர் பேசாமல் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்வார்”- ராஜ்மோகன்

 
ராஜ்குமார்

தவெகவை பொறுத்தவரை அன்று சொன்னது தான் இன்றும், என்றும்.. நீட்டை வைத்து வெற்று அரசியல் செய்வதை விடுத்துவிட்டு ஆக்கப்பூர்வமாக சட்டரீதியாக போராட வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “அமைச்சர் ஆனந்த் அவசரமாக சென்றதால் செய்தியாளர்களிடம் பேசவில்லை. பரபரப்பாக அவசர வேலையாக அன்று சென்றார். அவருக்கு இந்த துறையில் தெரியாதது எதுவும் இல்லை. உரிய நேரத்தில் அவர் பேசுவார். பேசாமல் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்வார். சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது பரிசீலனையில் உள்ளது. வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்க முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். சைவம் சாப்பிடுபவர்கள் சைவம் சாப்பிடட்டும். அசைவ குழந்தைகள் சிக்கன் பிரியாணி சாப்பிடட்டும். குழந்தைகளுக்கு புரதம் தேவை. சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் குழந்தைகள் கெட்டுப் போகாது.

நீட்டை வைத்து வெற்று அரசியல் செய்யாதீங்க... மாணவர்களுக்காக அனைவரும் ஆக்கப்பூர்வமாக ஒன்றாக நிற்போம். நீட் ரகசியம் எனக்கு தெரியும் என சொன்னாரே...அந்த ரகசியத்தை கடைசி வரை யாரும் கேகவில்லை.அன்றும், இன்றும், என்றும் தவெகவின் நிலைப்பாடு ஒன்றுதான். நீட் ரகசியத்தை பாக்கெட்டில் ஒளித்து வைத்திருக்கிறேன் என்று வெற்று அரசியல் செய்பவர்களிடமே இந்தக் கேள்வியை கேளுங்கள். நீட்டை வைத்து வெற்று அரசியல் செய்வதை விடுத்துவிட்டு ஆக்கப்பூர்வமாக சட்டரீதியாக போராட வேண்டும்” என்றார்.