மாணவர்கள் அறவழியில் போராடினால் ஆதரிப்போம்- அமைச்சர் ராஜ்மோகன்

 
மாணவர்கள் அறவழியில் போராடினால் ஆதரிப்போம்- அமைச்சர் ராஜ்மோகன்

நீட் தேர்வுக்கு எதிராக உரிய அனுமதி பெற்று அறவழியில் மாணவர்கள் போராடினால் பிரச்னை இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "நீர் எழில் பள்ளி" திட்டத்தை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “நீட் தேர்வுக்கு எதிராக உரிய அனுமதி பெற்று அறவழியில் மாணவர்கள் போராடினால் பிரச்னை இல்லை. தூண்டுதல் காரணமாக சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் போராட்டத்தால் கைது நடவடிக்கை பாய்ந்தது. சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை.

 ஒரு அரசுப்பள்ளி மூடுவதற்கு கூட எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழக அரசு அதில் தெளிவாக இருக்கிறது. அரசு பள்ளிகளை மூடுவது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவது தான் சரியாக இருக்கும். நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு. நீட் சீரமைப்பல்ல. தவெகவின் நிலைப்பாடு இதுதான்” என்றார்.