"எல்லா பிரச்சனைக்கும் திமுகதான் காரணம்"- அமைச்சர் ராஜ்மோகன்

 
s

நான் முதல்வன் திட்டத்தை முடக்கவோ, மாற்றவோ எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், “நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் சொன்ன சாதனைகளை எல்லாம் 40 நாட்களில் நீங்கள் செய்திருக்க முடியாது. அதற்கு திமுகதான் காரணம் என்று சொன்னார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன்.மாநிலத்தில் அதிகரித்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கும், போதைப்பொருள் புழக்கத்திற்கும் திமுக-வின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியே நேரடி காரணம். அரசு பள்ளிக்கு சென்று ரீல்ஸ் எடுத்த எங்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தலைவர் விஜய் சினிமாவை விட்டாலும்.. அவர்கள் அட்லீ என்கிறார்கள், புஷ்பா என்கிறார்கள், Jurassic Park என்பார்கள் போல் இருக்கிறது. பார்க்க வருகிற கூட்டணி தலைவர்களுக்கு பிளாஸ்டிக் சேர் போட்டதை போல் சிறுமைப்படுத்தக் கூடிய கட்சி தவெக அல்ல. நான் முதல்வன் திட்டத்தை முடக்கவோ, மாற்றவோ எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை. சிங்கப்பெண்கள் திட்டம் குறித்து இனி யாரும் விமர்சிக்கக் கூடாது. கோவில் கூடாது என்று சொல்லவில்லை கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்று சொல்கிறோம். ஆளுநர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். ஆனால் மக்கள் எங்கள் ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஒரே ஒரு குடும்பத்தில் இருந்து மட்டும் முதல்வர்கள் வந்து கொண்டிருக்கும் போக்கை மாற்றுவதற்காகதான் இப்படி ஒரு சட்டமன்றம் அமைந்துள்ளது” என்றார்.

முன்னதாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, “சிங்கப்பெண் படையினர் குற்றவாளிகளை பிடிக்காமல் ரீல்ஸ் போட்டு வருகின்றனர். மன்னன் எவ்வழியோ, அதே வழியில் சிங்கப்பெண்களும் ரீல்ஸ் போடுகின்றனர்” என்றார்.