"ஆலையில் வாயுக்கசிவு கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் ராஜ்மோகன்
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிந்து விபத்து நடந்துள்ளடு. தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்மட்ட சிகிச்சை கிடைக்க CM விஜய் உத்தரவிட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சம்பவம் நடந்த ஆலையில் வாயுக்கசிவு கட்டுக்குள் உள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அதி உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 64 பேர் அம்மோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்” என்றார்.
-

