“இதுவரை அரசியல் பழகிய Gen Z தலைமுறை, இன்று முதல் அதிகாரத்தை பழகப்போகிறது”- ராஜ்மோகன்
May 21, 2026, 16:05 IST1779359744345
கூட்டணி வைத்துக்கொண்டு அதிகாரத்தை கொடுக்காமல் இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இது ஒரு பெரிய மாற்றம்.. கூட்டணி மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரத்தை கொடுக்காமல் இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இதுவரை அரசியல் பழகிய Gen Z தலைமுறை, இன்று முதல் அதிகாரத்தை பழகப்போகிறது. அமைச்சரவையில் இளைஞர்கள் என்பதைவிட அதிகாரம் இளைஞர்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் தமிழக அமைச்சரவையில் ஒலிக்கப்போவது மிகப்பெரிய மாற்றம். இதற்கு காரணம் முதலமைச்சர் விஜய். தமிழக அரசு நடத்தும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் ஒலிக்கும் ” என்றார்.

