நயினாரின் பேச்சு அருவருக்கத்தக்கது- அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்..!
அப்பா எங்கனு சட்டமன்றத்துல ஏன் தேடுறீங்க..? வீட்ல போய் கேளுங்க..? முதல்வர் விஜய் குறித்து சர்சையாக பேசிய நயினார் நாகேந்திரன்.. ஒரு கட்சியின் தலைவர் போல் அல்லாமல் தெருமுனை பேச்சாளர் போல் பேசுவதா..? அமைச்சர் ராஜ்மோகன் காட்டம்...
“பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒரு அரசியல் தலைவரைப் போல பேசாமல் தெருமுனைப் பேச்சாளரைப் போல் பேசியுள்ளார்” என அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். மேலும், “அவருடைய பேச்சு அரசியல் நாகரிகத்துக்கு ஏற்புடையதல்ல. இதனை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். அரசியலில் மறைமுகமாக இருக்கும் நட்புகள் அனைத்தும் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது”
திமுகவினர் போல பாஜகவினரும் அவதூறாக பேசி வருகின்றனர். சத்தம் இன்றி சாதனைகளை நிகழ்த்தும் முதல்-அமைச்சர் விஜய். மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டது மக்கள்தான். தவெகவினர் அல்ல.சத்தமில்லாமல் ஒவ்வொரு நாளும் சாதனைகளை செய்து வருகிறார் முதல்-அமைச்சர் விஜய். ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
அப்பா எங்கனு சட்டமன்றத்துல ஏன் தேடுறீங்க..? வீட்ல போய் கேளுங்க..? முதல்வர் விஜய் குறித்து சர்சையாக பேசிய நயினார் நாகேந்திரன்.. ஒரு கட்சியின் தலைவர் போல் அல்லாமல் தெருமுனை பேச்சாளர் போல் பேசுவதா..? அமைச்சர் ராஜ்மோகன் காட்டம்...#Chennai | #TVK | #BJP | #NainarNagenthiran |… pic.twitter.com/2jV7cKVL7V
— Polimer News (@polimernews) August 15, 2026

