அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் நோட்டீஸ்

 
போக்குவரத்து துறை துருப்பிடித்துள்ளது; சரி செய்ய 3 மாதங்கள் ஆகும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Image

அமைச்சர்  ராஜ கண்ணப்பன், தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதை குறித்தும் தன்னுடைய அதிகாரத்தை இன்று வரை துஷ்பிரயோகம் செய்து அந்த அரசு நிலத்தை தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் இன்றைய தினம் புகாராக லஞ்ச ஒழிப்பு துறை,  முதல்வர் துணை முதல்வர் தலைமைச் செயலர் வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை செயலர்களுக்கு அனுப்பியது. இந்த அரசு நிலம் உடனடியாக மீட்கப்பட்டு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பொது ஊழியர்கள் மீதும் FIR பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் புகாரில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து அவதூறு பரப்பியதாக அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் அவதூறு பரப்பிய அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.