“பிரச்சாரத்தில் வீர வசனம் பேசிய விஜய் சட்டமன்றத்தில் பயத்தோடு அமர்ந்திருக்கிறார்”- ரகுபதி

 
 ‘தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் ‘சி’டீம்.. அது வெறும் ஜெராக்ஸ் காபி’ -   அமைச்சர் ரகுபதி

பிரச்சாரத்தில் வீர வசனம் பேசிய விஜய்  முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தில் அச்ச உணர்வோடு பயத்தோடு அமர்ந்திருப்பதை சட்டசபையில் பார்க்க முடிந்தது என முன்னாள் அமைச்சரும் திருமயம் சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி கூறியுள்ளார்.

ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பே்ிய ரகுபதி, “ஏ ஃபார்ம், பி ஃபார்ம் யார் கையெழுத்து போட்டு கொடுக்கிறார்களோ அவர்கள்தான் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர், சட்டமன்றத்தில் அதிலிருந்து பிரிந்து செல்வது என்றால் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தை அமல்படுத்த முடியாது. ஆனால் அதிமுகவில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகத்திற்கு 25 உறுப்பினர்களை தற்போது ஆதரவு தெரிவிக்க உள்ளனர். சபாநாயகர் உரிய முடிவு எடுக்கவில்லை என்றால் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். கட்சி தாவல் தடை சட்டத்திற்கு 25 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தற்போது அந்த மனு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. 

குதிரை பேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்தியுள்ளது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அதிமுக என்பது எதிர்க்கட்சி அதிலிருந்து பிரிந்து வந்த ஒரு சில குறிப்பிட்ட எம்எல்ஏக்களை முதலமைச்சர் சந்திக்கிறார் அவர் சந்திப்பதற்கு முன்பு சோபா ஒன்று போகிறது. சோபா வரும் முன்னே முதலமைச்சராக வரும் பின்னே என்ற பழமொழியாக தற்போது தமிழ்நாடு மாறி உள்ளது. விரைவில் சோபா கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் அவர்கள் அமைச்சர் ஆவார்களா என்பது குறித்து ஆளுநர் கையில் தான் அது உள்ளது அவர்தான் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். கட்சி தாவல் தடை சட்டம் இவர்கள் மீது பாய்யுமா என்பது ஆளுநர் முடிவை பொருத்தது. அரசியலமைப்பு சட்டப்படி மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றால் அவர்கள் தனி அணியாக செயல்பட முடியாது கட்சி தாவல் தடை சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். நீண்ட நாளாக காங்கிரசார் ஆட்சியில் பங்கு வேண்டுமென ஆசைப்பட்டார்கள். ஆசைப்பட்டபடி அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தோடு இணைந்து கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற உள்ளனர், விரைவில் அவர்கள் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்படும். 


மதுபான கடைகள் 717 மூடியதாக கூறியுள்ளார்கள். பட்டியல் வந்தவுடன் தான் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும். ஏற்கனவே மூடிய கடைகளை கணக்கு காமிக்கிறார்களா அல்லது உண்மையாகவே கடைகளை மூடி உள்ளனரா என்பது குறித்து அப்போதுதான் கருத்து கூற முடியும். தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் வீரா வசனம் பேசிய விஜய் முதலமைச்சர் ஆனவுடன் சட்டசபையில் வையா உணர்வோடு அச்ச உணர்வோடு தான் அமர்ந்துள்ளார் என்பதை காண முடிகிறது. வெளியே அவர் பேசியது சினிமா வானில் இருந்ததாகவும் ஆனால் சட்டமன்றத்தில் அவர் பய உணர்வோடு அச்ச உணர்வோடு அமர்ந்ததையும் நாங்கள் காண்கிறோம். ஐந்து ஆண்டுகள் இந்த அரசு நீடிக்குமா என்பதை போகப் போக தான் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுக- அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்பது பொய். எங்களுக்கு அது போன்று எந்த எண்ணமும் இல்லை. எங்களுக்கு பதவி ஆசை கிடையாது, கொள்கை தான் முக்கியம். பதவிக்காக நாங்கள் எந்த சமரசத்திற்கும் செல்ல மாட்டோம்” என்றார்.