“மோடியின் பருப்பு இங்கு வேகாது! பண்ணையாரப் போய் நாங்க மிரட்ட முடியுமா..?"- அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டை பொருத்தவரை பீகாரில் நடந்ததை போல் நடக்காது. நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எங்கள் கூட்டணி ஸ்ட்ராங்கானது. வலிமையானது இதை உடைப்பதற்கு எந்த சக்தியும் இன்று இந்தியாவில் இல்லை என தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “எஸ்ஐஆர் தேவை என்று முட்டாள்தனமாக கருத்தை சொல்கின்ற கட்சி அதிமுக தான் எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் எதை வேண்டும் என்றாலும் அறிவிப்பார். எஸ்ஐஆர் பணி மேற்கொள்ள போதிய கால அவகாசம் இல்லை என்பதால் தான் நாங்கள் அதனை எதிர்கின்றோம். தற்போது எஸ் ஐ ஆர் தேவையில்லை, தேர்தலுக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம், அவசர கதியில் எஸ்ஐஆர் பணி மேற்கொண்டால் எந்த பலனும் கிடைக்காது. அதனால்தான் இப்போது வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லி இருக்கிறாரே தவிர எஸ் ஐ ஆர் தேவை இல்லை என்பது எங்களது நோக்கம் அல்ல. எஸ் ஐ ஆர் முழுமையாக கையாளப்பட வேண்டும், அவசரகதியில் கையாளப்படக்கூடாது. இதில் திமுகவின் பங்கு எதுவும் கிடையாது.
தமிழ்நாட்டை பொருத்தவரை பீகாரில் நடந்ததை போல் நடக்காது. நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எங்கள் கூட்டணி ஸ்ட்ராங்கானது, வலிமையானது. இதை உடைப்பதற்கு எந்த சக்தியும் இன்று இந்தியாவில் இல்லை. பிரதமர் மோடி கனவு கண்டு கொண்டிருக்கிறார் என்பதை 2026ல் நிரூபிப்போம். தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் பருப்பு வேகாது. திமுக யாரையும் மிரட்டவில்லை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பண்ணையார் அவர் வேண்டுமென்றால் யாரையாவது மிரட்டலாம், நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. பண்ணையாரை மிரட்ட முடியுமா? அவரும் சாந்தமானவர்தான் அவரும் யாரையும் மிரட்ட மாட்டார். அவருக்கு திமுகவும் யாரையும் மிரட்ட மாட்டார்கள் என்பது தெரியும். அவர் தலைமைப் பொறுப்பில் இருக்கிறோம் என்ற காரணத்தினால் பேச்சுக்காக சொல்லுகிறார். காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று பிரதமர் மோடி சொல்வதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. எந்த கட்சியும் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் கிடையாது” என்றார்.


