2026 தேர்தலுக்கு பிறகு பாஜக காணாமல் போகும்! திமுக மீண்டும் ஆட்சியில் அமரும்- அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி ரகுபதி

2026 தேர்தலுக்குப் பிறகு பாஜக தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகுமே தவிர எங்களது தலைவரோ திமுகவோ காணாமல் போவாது. மீண்டும் திமுகவின் 2.0 தொடரும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “எஸ்ஐஆர் குறித்து ஏற்கனவே திமுக அதன் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி அதில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட நவம்பர் இரண்டாம் தேதி முடிவு செய்துள்ளார். அதில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் பதிவு செய்யப்படும். அதன் பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபான்மையினர் மக்களை ஒட்டுமொத்தமாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர்களை நீக்குவதற்கும் தேர்தல் ஆணையத்தின் மூலமாக ஒன்றிய அரசு மேற்கொண்டு இருக்கிறது. இதை எந்த காலத்திலும் திமுக கேட்கவில்லை. ஏற்கவில்லை. 

பீகாரிலும் இதுபோன்றுதான் நடந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து அகதிகளாக வந்து இங்கேயே இருக்கக்கூடிய நம்முடைய இலங்கை தமிழர்கள் போன்றவர்கள் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் எல்லாம் குடியுரிமை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு நாம் இங்கு வீடு வசதி ரேஷன் பொருட்கள் அனைத்தும் கொடுத்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு இங்கு குடியுரிமை கிடையாது. 11 ஆண்டுகள் 12 ஆண்டுகள் இருந்து அவருடைய மூதாதையர்கள் இந்தியாவில் இருந்த ஆதாரத்தை நிறுவித்தாள் கூட அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது கிடையாது. ஒரு வாக்காளரை இந்திய குடிமகனா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது இந்தியன் சிட்டிசன் ஆக்ட் 1955. ஆனால் இந்திய குடிமகனா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆதாரை ஏற்றுக்கொள்வது என்பது வேறு. அதே நேரத்தில் ஒருவரை இந்திய குடிமகனா இல்லையா என்று தீர்மானிக்கக்கூடிய சக்தியை இவர்களுக்கு யார் கொடுப்பது. ஆதார் வைத்திருப்பவர்கள் இந்திய குடிமகன் தானே, அப்புறம் ஏன் தேர்தல் ஆணையம் தான் இந்தியாவின் குடிமகனா இல்லையா என்பதை தீர்மானிக்கும் என்று சொல்வது ஏன் இது நிச்சயம் தவறு செய்யக்கூடிய முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. 

ரகுபதி

இதுகுறித்து நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்குகளில் நாங்களும் சேர்ந்துள்ளோம் நூற்றுக்கும் இயக்கங்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள் அவர்களுக்கு சில கட்டளைகள் வரும்பொழுது அந்த கட்டளைகளை பின்பற்றக்கூடிய சூழ்நிலை வருகிறது. எப்படிப்பட்ட ஆணைகளை தேர்தல் ஆணையம் சொல்லும் என்பது தெரியாது. தேர்தல் ஆணையம் மற்றும் தவறான விஷயங்களை சொல்லிவிட்டால் அதிலிருந்து பாதிக்கப்படுபவர்களுக்கு காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்க்கக்கூடிய எண்ணிக்கை லட்சத்திலிருந்து கோடி கணக்கில் வந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து இங்கு வேலை பார்த்துவிட்டு அவர்களது பண்டிகை காலங்களில் போது அவர்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர்.  ஆனால் இதில் இருக்கக்கூடிய ஆபத்து அவர்களுக்கு இங்கு வாக்காளர்களாக கொடுக்கும் பொழுது தமிழ்நாடு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை தெரியாது அவர்களது மாநிலத்தின் அரசியல் சூழ்நிலையை வைத்துக் கொண்டு வாக்களிப்பார்கள். அதனால் தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. 

தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். ஆனால் பீகாரில் இருந்து வருபவர்கள் கோயம்புத்தூரில் இரண்டு மாதமும் திருப்பூரில் இரண்டு மாதமும் திருச்சி திருநெல்வேலியில் மூன்று மாதமும் வேலை பார்க்கிறார்கள் இப்படி அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு தற்காலிகமாகத்தான் பணிபுரிகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் நிரந்தரமாக அங்கே இருக்கின்றனர் அதனால் நிரந்தரவாசிகளாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அப்படி இருப்பதில்லை அவர்களை நிரந்தரவாசிகளாக எடுத்துக் கொள்ள முடியாது நிரந்தரவாசிகளாக இருப்பவர்கள் தான் வாக்களிக்க முடியும்.  2026 தேர்தலுக்குப் பிறகு பாஜக தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகுமே தவிர எங்களது தலைவரோ திமுகவோ காணாமல் போவாது. மீண்டும் திமுகவின் 2.0 தொடரும். நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசி வருகிறார், புதிய கூட்டணிகள் அவர்களிடத்தில் செல்ல போவதில்லை” என்றார்.