"சீமானை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி"- அமைச்சர் ரகுபதி

 
ச்

சீமான் விவகாரத்தில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் இதில் தலையிடவில்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் வழக்கு பதிவு செய்து இந்த வழக்குகள் நடந்து வருகிறது, சீமானை சமாளிக்கிறது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி. அவர் ஒரு பிரச்சினையே கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “சீமான் வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு. ஏற்கனவே இதில் புகார் தரராக உள்ள பெண்மணி சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் இதில் தலையிடவில்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் வழக்கு பதிவு செய்து இந்த வழக்குகள் நடந்து வருகிறது. அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் திமுக விற்கு எந்த பின்புலமும் கிடையாது என்று. 

சீமானை சமாளிக்கிறது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி. அவர் ஒரு பிரச்சினையே கிடையாது. நாங்கள் இதில் தலையிட்டு இருந்தால் வழக்கை எப்படியெல்லாம் திசை திருப்பி இருக்கலாம். நாங்கள் தலையிடவில்லை. சீமான் தான் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கில் நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமையானது இது என்று கூறியது நீதிமன்றம் தந்த அழுத்தத்தில்தான் இந்த வழக்கு நடைபெறுகிறது தவிர திமுகவின் அடுத்ததால் நாங்கள் சீமானை கண்டு பயந்தோ இந்த வழக்கு நடைபெறவில்லை. சீமான் மீது 72க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. எல்லா வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. நிச்சயமாக அப்படியே நடக்கும்” என்றார்.