ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற காவல்துறை தயங்காது- அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி

யாரையும் சந்திக்க அஞ்சுகின்ற ஆட்சி மு.க.ஸ்டாலின் ஆட்சி அல்ல. யாராக இருந்தாலும் அவர்களை நேரடியாக சந்தித்து அதை கையாளுகின்ற திறமை உடைய முதலமைச்சர் தான் தமிழ்நாடு முதலமைச்சர் என  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

Governor wants to save ADMK former ministers - Law Minister Raghupathi |  'அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை கவர்னர் காப்பாற்ற நினைக்கிறார்' -  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருதுநகர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி அவருடைய வழக்கை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டபோது சிபிஐ விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்திற்கு சென்றவர் அவர். அவர் ஆட்சியில் இருந்தால் சிபிஐ விசாரிக்கக் கூடாது. அவர் ஆட்சியில் இல்லை என்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலைப்பாடு எடுக்கின்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் காவல்துறை இதில் நியாயமாக செயல்படும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நம்புகிறார்கள். அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களும் நம்புகிறார்கள்‌. இதில் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கிடையாது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை நிச்சயமாக தண்டனை வாங்கி தருகின்ற அளவிற்கு நமது அரசு செயல்படும். 

சமூக நீதியை கட்டி காப்பதில் இந்தியாவிலேயே திமுகவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் இணையாக வேறு எந்த கட்சியும் கிடையாது வேறு யாரையும் சொல்ல முடியாது. சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் சமூகநீதியை போற்ற வேண்டும் சமூகநீதியை பாதுகாப்பதில் யாருக்கும் விட்டுக் கொடுக்க அவசியம் கிடையாது. ஏனென்றால் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் நடக்கின்ற இயக்கம்தான் திமுக. ஒடுக்கப்பட்டவர்களை தூக்கி விட வேண்டும் முன்னேற்றமடைய வைக்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் திமுக. இது ஏழை மக்களுடைய இயக்கம் அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் தனிப்பட்ட எந்த மனிதர்களுக்காக வேண்டி பணிந்து போக வேண்டிய அவசியமும் அவர்களை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அவர் எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் குற்றவாளி கூண்டில் ஏற்றுவதற்கு தமிழ்நாட்டின் காவல்துறை என்றைக்குமே தயங்காது.

ஸ்டாலின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: ஆளுனருக்கு அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை

ஓபிஎஸ் அவரது காலத்தை மறந்து விட்டார். எடப்பாடி பழனிச்சாமியும் அவர்களது காலத்தை மறந்து விட்டார்‌. நாங்கள் சட்டமன்றத்திலேயே கூறியுள்ளோம், ஒவ்வொரு ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும். அப்படி நடக்கின்ற சம்பவங்கள் அது ஆட்சியாளர்களாலா? இல்லையா? என்பதை தான் பார்க்க வேண்டும். நாங்கள் நடைபெறக்கூடிய சம்பவங்களை தடுத்திருக்கிறோம் தடுக்க முயற்சி செய்திருக்கிறோம். அதை தூண்டி விடுவது நாங்கள் கிடையாது. நாங்கள் எடுத்திருக்கும் கடுமையான நடவடிக்கையை போல் எந்த அரசும் நிச்சயம் எடுக்க முடியாது‌‌. யாரும் எங்களுக்கு வேண்டியவர்கள் அல்ல, எங்களது கட்சிக்காரர்களும் அல்ல” என்றார்.