ஊர் ஊரா சுத்துற ஆளுநருக்கு அரசின் கோப்புகளை பார்க்க நேரமே இல்லை- ரகுபதி

 
minister mrk panneerselvam

ஆன்லைன் சூதாட்டம் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது, நீதிமன்றமும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர வேண்டும் என்பதை தான் உணர்த்துகிறது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

இறைபணி செய்வதில் திமுகவுக்கு இணையானவர்கள் யாருமில்லை: அமைச்சர் ரகுபதி  பெருமிதம் | minister raghupathy - hindutamil.in

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில் ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த முகாமை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்து வேலைவாய்ப்பில் தேர்வான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “இணையவழி சூதாட்டத்திற்காக சட்டமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டமுன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். அது வருகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேற்றபட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி  இருக்கேன். ஆளுநர் இதனை மத்திய பட்டியல் 31 என கூறி இருக்கிறார், ஆனால் இணையவழி சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்கள் மாநில பட்டியல் 34-ல்  வருவதால் இது குறித்து சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. இதை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பில் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். மீண்டும் ஒரு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்ற உயர்நீதிமன்றமே தீர்ப்பு அளித்திருக்கிறது, தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றால் உயர்நீதிமன்றமே அதிகாரம் இல்லை என்று சொல்லி இருக்கும்.

MKstalin rn ravi

நாங்கள் இந்திய திருநாட்டிற்கு முன்மாதிரியான ஒரு சட்டமாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சட்டமாக இணையவழி சூதாட்டத்தை ஒழிக்க கூடிய சட்டம். இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்குமான சட்டமாக எல்லா சட்ட வல்லுனர்களோடு கலந்து ஆலோசித்து சட்ட முன் வரைவு  தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்தோம். ஆளுநர் ஒரு முறை தான் இந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். ஏற்கனவே விளக்கம் கேட்டார் விளக்கம் கொடுத்து உள்ளோம், மீண்டும் இரண்டாவது முறையாக சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப உள்ளோம். உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது.  இந்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆளுநருக்கு நேரமே இல்லை, அவர் எல்லா ஊர்களுக்கும் சென்று வருகிறார். பாஜகவினர் சந்தித்து வருகிறார். மாற்றுக் கருத்துடையவர்களையும் சந்தித்து வருகிறார். அதனால் அவருக்கு இதுபோன்ற கோப்புகளை பார்ப்பதற்கு நேரமில்லை என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்‌.