ஆளுநர் ஆர்.என்.ரவியா? அண்ணாமலையா? அமைச்சர் கேள்வி

 
ragupathi

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவியா, அண்ணாமலையா என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சிறப்பைப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்” : பேரவையில் அமைச்சர் ரகுபதி  பெருமிதம்!


அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 4 மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த மசோதாவை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு நேற்று திருப்பி அனுப்பினார். ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி அனுப்பிவைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்பது சட்டம். ஏற்கனவே மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு விரிவான விளக்கத்தை அளித்துள்ளோம். தேவையான விளக்கத்தை அளித்த பிறகும் 4 மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய மசோதாவை ரத்து செய்த ஐகோர்ட் மீண்டும் கொண்டுவர தடை இல்லை என கூறியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர். நாங்கள் அதிகாரம் உள்ளது என தெளிவு படுத்தி இருக்கிறோம். தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதை மசோதாவில் குறிப்பிட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப உள்ளோம். ஆளுநரின் முடிவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படியே நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து பரிந்துரைகள் பெறபட்டன. நிபுணர்கள் குழு அளித்த பரிந்துரை படியே மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களை பாதுகாக்கவே ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டுவரப்படுகிறது. மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் நிராகரிக்க முடியாது. மாநில அரசின் அதிகாரங்கள் பட்டியலில் உள்ள 34 பிரிவின் கீழ் தான் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் குறிப்பிட்டதுபோல் 33-வது பிரிவின் கீழ் மசோதா நிறைவேற்றப்படவில்லை” எனக் கூறினார்.