ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம்- ஆளுநரை சந்திக்க இருக்கும் அமைச்சர் ரகுபதி

 
Rummy

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

உங்களுக்குதான் விலையில்லாதது, அரசு விலைகொடுத்துதான் வாங்குகிறது -  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சட்டத்துறையில் புதிய சட்டப் பட்டதாரிகளுக்கான தன்னார்வப் பயிற்சித் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  “ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.  ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும்  சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, சட்ட மசோதா குறித்து எந்த விதமான விளக்கமும் இதுவரை கேட்கப்படாத நிலையில் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் பெறம் நடவடிக்கையாக இன்றோ அல்லது நாளையோ ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக  திமுக மற்றும் இதர கட்சிகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது. வழக்கு விசாரணையின் போது தேவையான வாதங்களை அரசு முன்வைக்கும். ஜல்லிக்கட்டு தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த தேவையான வாதங்களை வழக்கு விசாரணையின் போது அரசு முன்வைக்கும்” என தெரிவித்தார்.