ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வீங்க? திமுகவுக்கு அமைச்சர் கேள்வி!

 

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வீங்க? திமுகவுக்கு அமைச்சர் கேள்வி!

திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வீர்கள் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் இன்று காலை தொடங்கியது. கேள்வி நேரத்துடன் ஆரம்பித்த அவையில், முதலில் விவாதிக்கப்பட்ட விவகாரமே நீட் தேர்வு தான். கருணாநிதி ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு இல்லை என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வீங்க? திமுகவுக்கு அமைச்சர் கேள்வி!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பாம்பிற்கு பால் வார்த்தது யார்? பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது திமுகவுக்கு புதிது அல்ல என கூறினார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வீர்கள் என முக ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முக ஸ்டாலின், ஜல்லிக்கட்டுக்கு விலக்கு பெற்றதை போலவே இதற்கும் விலக்கு பெறுவோம் என தெரிவித்தார்.

முக ஸ்டாலினின் பதிலுக்கு ஆட்சேபம் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு தமிழகத்திற்கு மட்டுமானது, நீட் தேர்வு அனைத்து மாநிலங்களுக்குமானது. ஜல்லிக்கட்டு போல இதற்கு விலக்கு பெற வழியில்லை என தெரிவித்தார்.