அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் இரண்டு துறைக்கும் ஒரே செயலாளர்

 
ஆனந்த்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் இரண்டு துறைக்கும் ஒரே செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Image

ஊரக வளர்ச்சி துறை செயலாளராக இருந்த பிரசாந்த் எம் வாட்னரே நீர்வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றும் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை செயலாளராக இருந்த சத்திய பிரதா சாகூ காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் நீர்வளத் துறை செயலாளர் வீட்டில் நான்கு கார்களும், முதன்மை தலைமை பொறியாளர் வீட்டில் இரண்டு கார்களும், சென்னை மண்டல தலைமை பொறியாளர் வீட்டில் இரண்டு கார்களும், மற்ற தலைமை பொறியாளர்கள் வீட்டில் தலா இரண்டுக்காரர்களும் நிற்பபதாக செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.