மதுரை விமான நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர் - கேக் ஊட்டிய உதயநிதி

 
ptr

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பிறந்தநாளை மதுரை விமான நிலையத்தில் கொண்டாடிய நிலையில், இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். 

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளையொட்டி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் தனது 57வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். 

இந்த நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இதேபோல் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேக் வெட்டி அதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதேபோல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கேக் வெட்டி அதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.