யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக அமைச்சர் பிரபு புகார்..!

 
1

சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதாகக் கூறி, யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு கோரி தமிழகக் கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

காரைக்குடி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, மனுவை முறைப்படி பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றப் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி கே. கோவிந்தராசன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், அமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அமைச்சர் தாக்கல் செய்த மனுவில், ஊடகங்கள்மற்றும் சமூக வலைதளங்களில் தன்னை குறிவைத்து பொய்யான, உள்நோக்கம் கொண்ட மற்றும் அவதூறான கருத்துகளை மாரிதாஸ் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாரிதாஸ் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவை தனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மாரிதாஸ் மட்டுமின்றி, அமெரிக்காவைச் சேர்ந்தX Corporation, Google LLCமற்றும் YouTube Indiaஆகிய நிறுவனங்களும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்பட்டதாக கூறப்படும் பாதிப்புகள் தொடர்பாக இந்த நிறுவனங்களும் வழக்கில் இடம்பெற்றுள்ளன.