பெரியார் சிலை பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை- அமைச்சர் பொன்முடி

 
 பொறியியல் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி..

பெரியார் சிலை பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் புகாருக்கு அமைச்சர் பொன்முடி மறுப்பு!

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்களும் உறுதியாக இருக்கிறார்கள், நாங்களும் உறுதியாக இருக்கிறோம். அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக ஆனதற்கு காரணமாக இருந்தவரே பெரியார்தான். பெரியார் இல்லையென்றால் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியிருக்க முடியாது. பெரியார் சிலை பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள் கூட பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளனர். செய்தியில் வர வேண்டும் என்பதற்காகதான் அண்ணாமலை இப்படி பேசி இருப்பார். வட இந்தியாவில் உள்ளவர்கள் கூட பெரியாரை ஏற்று கொண்டுள்ளனர். பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இடம்பெறக் கூட ஆளுநர் அனுமதிப்பதில்லை” என்றார்.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் கோயிலின் முன்பாக வைக்கப்பட்டுள்ள "கடவுளை நம்புபவன் முட்டாள்" எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ள பலகை மற்றும் கம்பத்தை அகற்றுவதே முதல் கையெழுத்தாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.