மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு - அமைச்சர் பொன்முடி

 
engineering counselling - அமைச்சர் க.பொன்முடி

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட மறுப்பதால், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளேன் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 பொறியியல் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி..

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட மறுப்பதால், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளேன். சங்கரய்யாவின் வரலாறுகளை ஆளுநர் அறிந்துக்கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கொடுக்க வேண்டிய கெளரவ டாக்டர் பட்டத்தை மறுக்கிறார் என்றால் இவரைப் போல சுதந்திரப் போரட்டத்திற்கு எதிரிகள் இருக்க முடியாது. ஆளுநர் அந்த காலத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸில் இருந்தவர். அவர்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது மதிப்பு கிடையாது. சங்கரய்யா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்திருக்க வேண்டும்.

நாளை மதுரையில் நடக்கவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை. அதை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளென். ஆளுநர் ஆர்.என்.ரவி போல் பொய் பேசுபவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழக ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆளுநர் செயல்பட்டுவருகிறார். பாஜக, ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாகதான் ஆளுநர் இதுபோன்று செய்கிறார். சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க மறுப்பது ஏன்? என ஆளுநர் விளக்கம் தர தயாரா? இதைவிட மோசமான ஒரு ஆளுநர் இருந்தது இல்லை. ஆளுநர் பொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார். தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்த பின்னர் ஆளுநர் தனது கருத்துக்களை பேசட்டும். ஆளுநர் ரவி தினமும் ஒரு பொய் சொல்கிறார்” என சாடினர்.