அண்ணா பல்கலை., வெளியிட்டது அரசுக்கே தெரியாமல் வந்த அறிவிப்பு - அமைச்சர் பொன்முடி பகீர் தகவல்!!

 
Ponmudi

அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவு நீக்கப்படாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கட்டடவியல் மற்றும் இயந்திரவியல் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்யப்படுவதாக அண்ணா  பல்கலைக்கழக கல்வி படிப்புகளுக்கான மையத்தின் இயக்குனர் ரோஸிமின் திலகர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்தார்.

anna

இந்நிலையில்  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது , "அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இயந்திரவியல் மற்றும் கட்டிடவியல் பாடப்பிரிவுகள் மூடப்படுவது குறித்து உயர் கல்வித்துறை செயலாளருக்கும்,  அமைச்சராகிய எனக்கு எதையும் தெரிவிக்கவில்லை.  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எங்களுக்கு தெரிவிக்காமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்" என்று கூறினார். 

ponmudi
தொடர்ந்து பேசிய அவர்,  "துணைவேந்தர் இதுபோன்று செய்தது தவறு.  அரசுக்கு தெரியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது . எங்களுக்கே இது குறித்து தெரியவில்லை . இந்த அறிவிப்பு மிகவும் மோசமானது என்று கூறினோம். அந்த தவறை உணர்ந்து தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடனே அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது . துணை வேந்தர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். அவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் இது போன்று நடக்கிறது என்று கூறிய அவர் , மாநில மொழியிலேயே தமிழ் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதுதான் முதல்வர் நோக்கம் .தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்று நோக்கத்தில் தான் முதல்வர் செயல்பட்டு வருகிறார். மாணவர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல தமிழ் வழிக் கல்வியின் முக்கியம்" என்றார்.