"சு.வெங்கடேசன் எம்பி தற்போது நலமாக உள்ளார்"- பொன்முடி
உடல்நலக்குறைவு காரணமாக விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.பி. வெங்கடேசம் தற்போது நலமாக உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு மூன்றாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இன்றோடு மாநாடு நிறைவு பெறும் நிலையில் மாநாட்டில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். மூன்று நாட்களாக தொடர் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார்(இ.எஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், ஆறு மணி நேரம் மருத்துவர் கண்காணிக்கப்பில் இருக்க அறிவுறுத்தினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வெங்கடேசனை வனத்துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, உடல் நல குறைவால் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் உடல் நலமாக உள்ளாதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உடல் நலம் குறித்து வெங்கடேசனிடம் விசாரித்ததாகவும் எம் பி வெங்கடேசன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்தார்.