அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 
tn

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பணியாற்றி வரும் பொன்முடியின் சகோதரர் டாக்டர்.தியாகராஜன் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.  சிறுநீரக சிறப்பு அரசு மருத்துவராக பணியாற்றி வந்த இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ponmudi brother

இந்த சூழலில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மருத்துவர் தியாகராஜன் உயிரிழந்தார். அவரது உடல் இன்று காலை விழுப்புரத்தில் உள்ள  இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் , "மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் க. தியாகராஜன் (65) அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன், உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.