"மின் தேவையை கணிக்காதது ஏன்? மத்திய அரசு தோல்வி" - அமைச்சர் நிர்மல்குமார்

 
“கருணாநிதி செய்த தவறு... மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசால் எதுவும் செய்ய முடியாது”- நிர்மல்குமார்

மின் தேவை திட்டமிடலில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“விஜய்க்கு மக்கள் அளிக்கும் செல்வாக்கை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது”- நிர்மல்குமார்

ராஜஸ்தான் மாநிலம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.46-க்கு கொள்முதல் செய்துள்ளது. இதுவே நாட்டின் மிக உயர்ந்த கொள்முதல் ஆகும். உச்சபட்ச மின் தேவை, காற்றாலை உற்பத்தி குறைவு காரணமாக தமிழ்நாடு அரசு ஒரு யூனிட்டிற்கு ரூ.37 வரை கொள்முதல் செய்தது. இந்த அதிகப்படியான மின் உற்பத்தி செலவு, மின்சார கொள்முதல் மாநிலத்தின் மின் விநியோகச் செலவுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நாட்டிலேயே அதிகபட்சமாக யூனிட் ரூ.46  என்ற விலைக்கு தோல்பூர் எரிவாயு மின்  உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்த ராஜஸ்தான் மாநில அரசு.  யூனிட் 46 என்ற விலைக்கு 330 மெகாவாட் மின்சாரத்தை ராஜஸ்தான் கொள்முதல் செய்துள்ளது. 


இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில், "ராஜஸ்தான் மாநிலம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.46.09-க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.46.09 செலவு என்பது மத்திய அரசின் பெரும் தவறு.  மின் தேவையை முன்கூட்டியே கணித்து திட்டமிடுவதில் மத்திய மின்சார அமைச்சகம் தோல்வியடைந்துள்ளது. மாநிலங்கள் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் நிலையைத் தவிர்க்க, துல்லியமான கணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தேவை விநியோக இடைவெளிகள் ஏன் முன்கூட்டியே கணிக்கப்பட்டு திட்டமிடப்படவில்லை? இதுகுறித்து மத்திய மின்சார அமைச்சகம் ஆராய வேண்டும். இப்போதாவது தேசிய அளவிலான முன்னறிவிப்பு, மாநிலங்களுடனான ஒருங்கிணைப்புக்கு திட்டமிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்