"கரூர் கம்பெனி, பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி கவனத்திற்கு.." - நிர்மல்குமார் பரபரப்பு பதிவு

 
s

மின்சார வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்ய கடுமையாக போராடி வருகிறோம் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தற்பொழுது விடுக்கப்பட்டுள்ள  டெண்டர் வரும் அக்டோபர் 31 வரை மட்டுமே, அதுவும் peak hours தேவையான மாலை 6 மணி முதல் 12 மணி வரை. (6 மணி நேரம் மட்டுமே) மின்சார வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்ய கடுமையாக போராடி வருகிறோம். கண்டிப்பாக சீரமைப்போம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் துறைவாரியாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு சீரமைப்பும் நடைமுறை படுத்தப்பட்ட பிறகு அது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

Long term ஒப்பந்தம் குறித்து பொய் சொல்வதாக கூறிய “கரூர் கம்பெனி” மற்றும் “3 மணிநேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி” கவனத்திற்கு: கடந்த 15 வருடத்தில் போடப்பட்ட long term ஒப்பந்தம் அனைத்தும் அதிமுக அம்மா காலத்தில் 2013-யில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், திமுக ஆட்சி காலத்தில் எந்த long term ஒப்பந்தமும் போடப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.