எங்களுக்கெல்லாம் அரசியல் பின்புலமோ, பெரிய பணபலமோ இல்லை; எங்களின் ஒரே பலம் "விஜய்" - அமைச்சர் நிர்மல் குமார்
எங்களுக்கெல்லாம் எந்தவித அரசியல் பின்புலமோ, பெரிய பணபலமோ கிடையாது. சத்தமில்லாமல் எங்களை எல்லாம் அமைச்சராக உருவாக்கி நடக்க முடியாத விஷயங்களை செய்து காட்டிவிட்டார் முதல்வர் விஜய் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “எந்தவித பண பலம் இல்லாத சாதாரண பின்னணியில் இருந்துவந்தவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கியவர் முதலமைச்சர் விஜய். எங்களுக்கெல்லாம் எந்தவித அரசியல் பின்புலமோ, பெரிய பணபலமோ கிடையாது..! சத்தமில்லாமல் எங்களை எல்லாம் அமைச்சராக உருவாக்கி நடக்க முடியாத விஷயங்களை செய்து காட்டிவிட்டார் முதல்வர் விஜய். எங்களுக்கு விழுந்த ஒவ்வொரு வாக்கும் விஜய் ஒருவரின் முகத்துக்காகதான். எங்களின் ஒரே பலம் விஜய் தான். கடந்த தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களின் செலவு 2 அல்லது 3 கோடி தான் இருக்கும். ஒரு எம்.எல்.ஏ 3 லட்சம் தான் அதிகபட்சம் செலவு செய்திருப்பார். அதனால் தான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என நாங்கள் தைரியமாக செயல்படுகிறோம்.
சென்னை மத்திய சிறை-1ல் தொழிற்பயிற்சி நிலையம் (ITI) ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும். சிறைக் கைதிகளின் பார்வையாளர்கள் சந்திப்பு மற்றும் காத்திருப்பு கூடங்கள் மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் ஒருங்கிணைந்த மனநல மையம் ரூ.3.63 கோடி செலவில் அமைக்கப்படும் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட சிறை வளாகம் அமைக்க ரூ.48.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி உயர் பாதுகாப்புச் சிறைக்கான தனி நாய் படை (Dog Squad) உருவாக்க ரூ.1.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

