“போதை மன்னனுடன் திமுகவுக்கு தொடர்பு”- ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்
கோவை அமுதன் வழக்கு போதை பிரச்சனை சம்மந்தப்பட்ட வழக்கல்ல , வழக்கை திசை திருப்ப வேண்டாம் என அமைச்சர் CTR நிர்மல்குமார் கேட்டுக்கொண்டார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் நிர்மல்குமார், “எந்த வகையில் தமிழகத்திற்கு தீமைகள் வந்திருந்தாலும் அது தீயசக்தி திமுக மூலம் மட்டும் தான் வந்திருக்கும். கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என்பது நாம் அறிந்ததே. போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் உடன் கடந்த ஆட்சியில் முதல்வரின் குடும்பம் தொடர்பில் இருந்ததார். கோவை அமுதன் வழக்கு போதை பிரச்சனை சம்மந்தப்பட்ட வழக்கல்ல , வழக்கை திசை திருப்ப வேண்டாம். கோவை மாணவர் கொலையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இரு குழுக்கள் இடையேயான மோதலில் மாணவர் அமுதன் கொலை, போதைப் பொருள் தொடர்பான வழக்கு அல்ல. மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். மயக்க நிலையில் இருந்த அமுதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ, அரசுக்கோ இல்லை. போதைப்பொருள் குறித்து புகார் அளித்ததால் கொலை என்பது தவறு. மாணவர் அமுதன் கொலை குறித்து 3 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
1957ல் மேகமலை காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மேகமலை விவகாரத்தை சரியாக கையாளவில்லை. 1957ல் மேகமலை ரிசர்வ் லேண்டாக அறிவிக்கப்பட்டது. 1978ல் காப்புக்காடாக அறிவிக்க முன்மொழிவு செய்யப்பட்டது. மேகமலை 2009ல் திமுக ஆட்சியில் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக ஆட்சிகளில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேகமலை - உச்சநீதிமன்றத்தில் சரியான வாதங்களை முன்வைக்கவில்லை. மத்திய அரசின் ஆய்வின்போது உரிய ஆவணங்கள் கொடுத்திருக்க வேண்டும். மேகமலை - தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2021-ல் புலிகள் காப்பகமாக அறிவித்த போதும் திமுக முறையாக கையாளவில்லை.கடந்த கால ஆட்சியில் இந்த வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.2025 - 26 வரை ஆய்வு செய்தபோது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது” என்றார்.
-

